தமிழ்நாட்டில் ஜனவரி 20 திகதிக்குப் பின்னர் நடைபெறவிருந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள், கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த இந்தத் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 20ம் திகதிக்கு பின்னர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வரும் 20ம் திகதிக்கு பின்னர் நடைபெறவிருந்த அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் , கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று அறிவித்துள்ளார்.
Comments powered by CComment