இந்தியாவில் மறுபடியும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதாகத் இந்தியச் சுகாதாரத்துறை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் 27,553 பேருக்கும், நேற்று 33,750 கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் இன்று 37,379 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,49,60,261 ஆக உயர்ந்துள்ளதாகவும், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,71,830 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் இதுவரை 1,892 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்றில் இருந்து 766 பேர் குணமடைந்த நிலையில் 1,126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மராட்டியம் - 568, டெல்லி -382, கேரளா - 185, குஜராத் - 152, தமிழகம் -121, ராஜஸ்தான் -174 எனும் வகையில் அதிகபட்ச ஒமைக்ரான் பாதிப்பு பதிவான மாநிலங்களாக உள்ளன.
Comments powered by CComment