திராவிடர் கழக முன்னாள் தலைவர் தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம்
இன்று (24ஆம் திகதி) அனுசரிக்கப்படுகிறது.
அதன் காரணமாக தமிழ்நாடு அரசு சார்பில், அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தும், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.
Comments powered by CComment