பேருந்துகளில் சத்தமாக பாட்டு கேட்க தடை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போதைய காலக் கட்டத்தில், பேருந்துகளில் பயணம் செய்யும் போது, கையில் ஸ்மார்ட் போனை வைத்துக் கொண்டு, அருகில் இருக்கும் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுமா, இல்லையா என்பதை கருத்தில் கொள்ளாமல், பாட்டுக் கேட்பது, வீடியோக்கள் பார்ப்பது சர்வ சாதாரணமாகி விட்டது.
இது போன்ற செயல்களால் கோபமடைந்த நபர் ஒருவர், பேருந்தில் பயணிக்கும் போது, சத்தமாக பாட்டுக் கேட்கவும், வீடியோ பார்க்கவும் தடை விதிக்கக் கோரி, கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு, கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், பேருந்தில் இனி மொபைல் போனில் அதிக சத்தத்துடன் கூடிய வீடியோக்களை பார்ப்பவர்கள், சக பயணிகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என பேருந்து நடத்துனர், ஓட்டுனர் அறிவுறுத்த வேண்டும். இந்த அறிவுறுத்தலை மீறும் பயணியை பேருந்து ஊழியர்கள் தாராளமாக வெளியேற்றலாம் என அதிரடியாக உத்தரவிட்டு உள்ளனர்.
Comments powered by CComment