தமிழக எதிர்க்கட்சி தலைவர் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எம்ஜிஎம் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். குடலிறக்கம் பிரச்சினை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான பரிசோதனை மேற்கொள்வதற்காக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரிசோதனை முடிந்த பின்னர் இன்று மதியமே அவர் வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.
Comments powered by CComment