இந்தியாவின் தேசிய மொழி இந்தியே என்பது மூடநம்பிக்கை. இந்த நம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான, கமல்ஹாசன், தனது டுவிட்டர் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அவர் அக்குறிப்பில், “இந்தியா பல மொழிகளின் நாடு. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நமக்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை. என்றாலும் இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது. தெளிவுபடுத்த வேண்டியது நடுவண் அரசின் கடமை.” என்று மேலும் தெரிவித்துள்ளார்.
Comments powered by CComment