விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று பக்தியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா கொரோனா ஊரடங்கு வழிமுறைகளை கடைபிடித்து வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
புதுச்சேரியில் மிகவும் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனைதொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது.
Comments powered by CComment