அதிமுகவை சேர்ந்த அம்மா பேரவை இணை செயலாளர் எஸ்.பி. சுகுமார் என்பவர் வேலூர், சத்துவாச்சாரி,காகிதப்பட்டறை, காட்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் அரசு பணி வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் ரூ. 2லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார்.
இவ்வாறாக சுமார் ரூ. 46 லட்சம் வரையில் பெற்ற அவர், சொன்னப்படி வேலை வாங்கி தராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி சுகுமாரிடம் கேட்டுள்ளனர்.
பண மோசடி செய்தும் இல்லாமல் பணத்தை திருப்பி அளிக்கும்படி கேட்டவர்களுக்கு சுகுமார் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து பல்வேறு காவல் நிலையங்களில் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்து தங்களது பணத்தை மீட்டுத்தருமாறு கோரிக்கை வைத்தனர்.
Comments powered by CComment