பெங்களூரில், சாலையோர நடை பாதையில் கார் மோதி தீப்பிடித்து எரிந்ததில், ஓசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷின் மகன் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூர் கோரமங்களா பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் இந்தக் கோர விபத்து நடைபெற்றுள்ளது. இதுகுறித்து பெங்களூர் நகர போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் ரவிகாந்த் கவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "விபத்துக்குள்ளான இந்த கார் சாலையோர பிளாட்பாரம் மேலே ஏறி பிறகு அங்கே இருந்த கட்டிடம் ஒன்றின் சுற்றுச்சுவர் மீது மோதியுள்ளது. வேகமாக கார் வந்து இருக்கவேண்டும் என்று சந்தேகிக்கிறோம். சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர், இன்னொருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதல் கட்ட விசாரணையில் ஓட்டுனரின் அதிவேகம் காரணமாக இந்த விபத்து நடைபெற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
சம்பவம் நடந்த நேரத்தில் இங்கு மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாக இருந்து இருக்கும். இதை பயன்படுத்தி மிக வேகமாக பயணித்து இருக்கக்கூடும் என்று தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்
Comments powered by CComment