திருச்சியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி உறையூர் சாலை பகுதியை சேர்ந்த சக்திதாசன் என்பவர் திருப்பூரில் இருந்து மொத்த மருந்து உரிமத்தின் மூலம் மருந்துகளை வாங்கி போதை பொருளாக இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக இரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
அதனை தொடர்ந்து சக்திதாசன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த குமார், ராம்நாத், நந்தகுமார், பாலாஜி, பிரகாஷ், குமார் ஆகியோரை கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் சக்திதாசன்(31), குமார்(24), ராம்நாத்(31) ஆகியோர் தொடர்ந்து இந்த குற்றச்செயலில் ஈடுபடும் எண்ணம் உடையவர்கள் என தெரிய வந்ததால் அவர்கள் மூவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
Comments powered by CComment