கர்நாடக மாநில முதல் மந்திரியாக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்றுக்கொண்டார்.
நேற்று முந்தினம் கர்நாடக முதல் மந்திரியாக பதவிவகித்துவந்த எடியூரப்பா பா.ஜனதா கட்சியின் மேலிட உத்தரவை அடுத்து பதவி விலகினார். இதனையடுத்து அடுத்த கர்நாடக முதல் மந்திரி யார் என்பது குறித்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று பெங்களூருவில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போது கட்சியின் சட்டசபை குழு தலைவரானான பசவராஜ் பொம்மை புதிய முதல்-மந்திரியாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து இன்று காலை பெங்களூல் கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் 23வது கர்நாடக முதல் மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றுக்கொண்டார்.
Comments powered by CComment