தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டப்பேரவை கட்சிகளின் கூட்டம் கூடவுள்ளது. இதில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிப்பு இடம்பெறவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைபாட்டை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளார். அதோடு மத்திய அரசு இந்த பிரச்சினைக்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் கோரப்பட்டது.
மேலும் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்பாக தமிழக விவசாயிகளின் நலன் குறித்தும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரின் இவ்விவகாரம் தொடர்பான ஒருமித்த எண்ணங்களை கேட்டறிந்து கலந்தாலோசிக்க தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெறவுள்ளது.
Comments powered by CComment