இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை இன்னமும் முடிவுக்கு வரவில்லை என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு மாநிலங்களில் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது எனவும், ஆகவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவர் வி.கே.பால் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் பேசுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்தியாவில் 12 மாநிலங்களில் மொத்தம் இதுவரை 56 நபர்கள் உருமாறிய டெல்டா பிளஸ் வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், ஆறு மாநிலங்களில் பரவு வீதம் மீண்டும் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
Comments powered by CComment