இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக நாளை, பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களைச் சந்திக்கின்றார்.
நாளை புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தினைத் தொடர்ந்து, நாளை மாலை மத்திய அமைச்சர்கள் குழு ஆலோசனை கூட்டமும் நடைபெறவுள்ளதாக அறிய வருகிறது.
நாளை நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், முக்கிய விடயங்களாக, கொரோனா மூன்றாவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மற்றும் தடுப்பூசிப் பணிகளை மேலும் துரிதப்படுத்துதல் என்பன குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments powered by CComment