இந்தியாவில் கடுமையான தாக்கத்தைக் கொடுத்த கொரோனா தொற்றின் 2வது அலை, கடந்த சில தினங்களாக குறையத் தொடங்கியிருப்பதாக, மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சகத்தின் இன்றைய தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் பதிவாகிய புதிய புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை, 1 லட்சத்து 65 ஆயிரத்து 553 எனத் தெரியவருகிறது. இது கடந்தவாரத்தில் இருந்த எண்ணிக்கையிலிருந்து கனிசமாகக் குறைந்திருப்பதைக காட்டுகிறது.
அதேவேளை தொற்று பாதிப்புகளுக்கு உள்ளானவர்களில், ஒரே நாளில் 3,460 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,25,972 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 21,20,66,614 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments powered by CComment