காலநிலை அவதானமாக அரபிக்கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதனால் கேரளாவில் கனமழை தொடர்ந்துவருகிறது.
'டவ்தே ' எனும் இந்த புயலை அடுத்து கேரளாவில் மீண்டும் கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்றுடன் மழையும், கடல் கொந்தளிப்பும் கூடுதலாக இருக்கும் என மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு சிவ்வப்பு எச்சரிக்கையும் ஏனைய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே 'டவ்தே புயல் நாட்டின் மேற்கு கடற்கரையை நெருங்குவதால் லட்சத்தீவின் அகட்டி விமான நிலையத்தில் விமான நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
Comments powered by CComment