இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ஊகங்கள் வெளியிடப்பட்ட நிலையில், அலரிமாளினை முன்பாக பிரதமருக்கு ஆதரவாகவும், எதிராவும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இலங்கையில் இன்று பாரிய அளவில் ஹர்த்தால் !
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்குப் பொறுப்பேற்று, ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் வெளியேறுமாறு நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில், இன்று நாடாளவிய ரீதியில் ஹர்த்தால், மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூரில் அண்ணாமலை !
இலங்கை மலையகத்தில் நேற்று நடைபெற்ற மேதின நிகழ்வில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் திரு.அண்ணாமலை, இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
பூரண கொவிட் தடுப்பூசி தொடர்பான வர்த்தமானி ரத்து
இலங்கையில் குடிவரவு குடியகல்வு திணைக்கள VIP, CIP சேவைகள் நிறுத்தம்
நாளை முதல் கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் VIP மற்றும் CIP சேவைகளை நிறுத்துவதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் அரசின் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை - காலிமுகத்திடலில் கலகம் அடக்கும் காவலர் குவிப்பு !
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கையில் பிரதமர் பதவி விலகத் தயார் - ஐனாதிபதி இடைக்கால அரசுக்கு ஆலோசனை !
இலங்கையில் நிலவிவரும் அரசியற் குழப்பங்களுக்குத் தீர்வுகாணும் வகையில், இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.