counter create hit இன்று 2519 புதிய தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படுகிறது

இன்று 2519 புதிய தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படுகிறது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
புதிய தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
இலங்கையின் நோயாளர் பராமரிப்பு சேவையினை வலுப்படுத்தும் வகையில் 2,519 புதிய தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.

குறித்த நியமனக் கடிதங்களை இன்று (17.11.2023) பிரதமர் தினேஷ் குணவர்த்தன வழங்கி வைக்கவுள்ளார்.

2018 இல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட தாதியர் மாணவர் குழுவின் கீழ் 2020 ஜனவரியில் பயிற்சியை ஆரம்பித்து பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 2519 தாதியர்களுக்கு குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

தற்போது நாடளாவிய ரீதியில் 42,000இற்கும் அதிகமான தாதியர்கள் சுகாதாரத் துறையில் கடமையாற்றுகின்ற நிலையில் மேலும் இந்த 2519 புதிய தாதியர்கள் இணைந்து கொள்வதன் மூலம் இந்த எண்ணிக்கை 45,000ஐ தாண்டும்.

தரமான மற்றும் உகந்த நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணும் நோக்கில் நாடளாவிய ரீதியில் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் மாகாண சபையின் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களைக் கருத்தில் கொண்டு இந்தப் புதிய தாதியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula