counter create hit பாடசாலை அதிபர்கள் நியமனம் தொடர்பில் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

பாடசாலை அதிபர்கள் நியமனம் தொடர்பில் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
கல்வி அமைச்சின் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு.
இலங்கை அதிபர் சேவையின் தரம் III-க்கான வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக கல்வி அமைச்சினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த ஆட்சேர்ப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான இடைக்கால தடை உத்தரவு இன்று(27) மீளப்பெறப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 4718 அதிபர் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்,ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பான சுற்றுநிருபத்தை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றத்தினால் இதற்கு முன்னர் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவும் நீக்கப்பட்டுள்ளது.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula