பணிப்புறக்கணிப்பு காரணமாக 10இற்கும் மேற்பட்ட தொடருந்து சேவைகள் பாதிப்பு!
இன்றைய தினத்தின் (12) இதுவரையான காலப்பகுதியில் 10இற்கும் அதிகமான அலுவலக மற்றும் ஏனைய தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுமார் 5 வருடங்களாக தாமதமாகிவரும் தரம் உயர்வை விரைவுபடுத்துமாறு கோரி வந்த போதிலும், அதற்கான உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்றிரவு தொடருந்து இயக்குநர்கள் சங்கத்திற்கும், தொடருந்து முகாமையாளருக்கும் இடையில் அவசர பேச்சுவார்த்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எனினும் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தமையினால், நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு தொடருந்து இயக்குநர்கள் சங்கம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.
Comments powered by CComment