பல பொருட்களின் இறக்குமதித் தடையை நீக்கி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் 09.06.2023 திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையெழுத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இலத்திரனியல் பொருட்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments powered by CComment