இலங்கையில் எதிர்வரும் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறை.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கைக் குறிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது என பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அன்றைய தினம் தேசிய துக்க தினமாக கடந்த வாரம் அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து அரச கட்டடங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
Comments powered by CComment