இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள்.
இதன் காரணமாக ஏனைய அலுவலக மற்றும் அலுவல்கள் வீடுகளில் இருந்தே மேற்கொள்வதற்கான ஆலோசனை வழங்கப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்று (27) மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியராளர் சந்திப்பில் அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,துறைமுகம் ,சுகாதாரசேவை அத்தியாவசிய உணவு விநியோகம் மற்றும் குறுகிய தூர போக்குவரத்து சேவை, ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் தொழில் துறைக்காக ,தற்போது நிலவும் வரையறுக்கப்பட்ட எரிபொருள் தொகை விநியோகிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக , மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுககளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜுலை 10ம் திகதி முதல் தொடர்ச்சியாக எரிபொருள் மற்றும் கேஸ் விநியோகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்
Comments powered by CComment