இலங்கையிலுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தற்காலிகமாக தீர்வு காணும் வகையில் சில வாகனகங்களின் பாவனைக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வைக் கொண்டுவரும் பிரேரணையாக 2000cc க்கும் அதிகமான எஞ்சின் திறன் கொண்ட அனைத்து கார்கள் மற்றும் ஜீப்களின் பாவனைக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட வேண்டும் என கோரியுள்ளார்.
ஆடரம்பர வாகனங்களுக்கு பயன்படுத்தும் எரிபொருளை கொண்டு, நீண்ட காலத்திற்கு முச்சக்கரவண்டிகளை செயற்படுத்த முடியும்.
எரிபொருள் நெருக்கடியை நிர்வகிப்பதற்கு உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டிய யோசனைகள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுத்து மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் உதய கம்பன்பில மேலும் கூறினார்.
Comments powered by CComment