வருடாந்த அறிக்கைகள் உட்பட அனைத்து அறிக்கைகளையும் மென் பிரதிகளாக மின்னஞ்சல் ஊடாக சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே, தேவையான அறிக்கைகள் மற்றும் பாராளுமன்றம் தொடர்பான ஏனைய ஆவணங்களை மென் பிரதிகளாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்புவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு சிறப்பு தளத்தை சேர்க்க நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது.
Comments powered by CComment