இம்முறை ஹஜ் கடமைக்காக இலங்கையில் இருந்து ஹஜ்ஜாஜிகளை அனுப்பாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் ஏற்படும் செலவுகள் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஹஜ்ஜாஜிகளை இம்முறை ஹஜ் கடமைக்கு அழைத்துச்செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக அமைச்சில் நேற்று (30) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரதான முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இம்முறை ஹாஜிகளை அழைத்துச் செல்வதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டு அதனை அவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.
இந்த தீர்மானம் இன்று சவுதி அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டதாக திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் தெரிவித்தார்.
இந்த ஆண்டு 1,585 இலங்கையர்களுக்கு ஹஜ் கடமை பங்குகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments powered by CComment