பெல்மடுல்ல பிரதேசத்தில் உள்ள கிரிதிஎல அணைக்கட்டில் இருந்து சிறுவன் ஒருவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் கடந்த 26 ஆம் திகதி லெல்லுப்பிட்டிய பகுதிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளதுடன், அவர் வீடு திரும்பாதமை தொடர்பில் அவரது பெற்றோர் கடந்த 27 ஆம் திகதி இரத்தினபுரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று (28) குறித்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் குறித்த மாணவன் மேலும் சில மாணவர்களுடன் நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
Comments powered by CComment