அரச தரம் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கு முன்னர் ஆரம்ப வகுப்புக்களைத் தவிர ஏனைய அனைத்து வகுப்புக்களுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது அனைத்து வகுப்புக்களுக்கும் விடுமுறை வழங்குவது தொடர்பான கல்வி அமைச்சின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Comments powered by CComment