counter create hit 43 வருடங்களுக்குப் பிறகு திருத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம்

43 வருடங்களுக்குப் பிறகு திருத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நாட்டில் சுமார் 43 வருடங்களுக்குப் பிறகு பயங்கரவாத தடைச்
சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

43 வருடங்களின் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான உத்தேச சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அங்கீகரிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

சர்வதேச நியமங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப சட்டத்தை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை இராஜதந்திர சமூகத்தினருடனான கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி தடை உத்தரவு, உத்தரவுகளை நீதித்துறை மறுஆய்வு செய்தல், குற்றம் சாட்டப்பட்ட வழக்குகளை விரைவாகத் தீர்ப்பது மற்றும் நீண்ட கால காவலில் வைப்பது ஆகியவற்றை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நீதவான்கள் மற்றும் நீதித்துறை வைத்திய அதிகாரிகளை அணுகுவதற்கும், தடுப்புக்காவலின் போது சித்திரவதைகளை தடுப்பதற்கும், தினசரி வழக்குகளை விசாரிப்பதற்கும் விசேட திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula