பரீட்சை சான்றிதழை ஒரு நாள் சேவை ஊடாக வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை (24)
முதல் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிப்பதற்கு, நிகழ்நிலை முறைமையிலும், மின்னஞ்சல் ஊடாவும் மாத்திரம் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
தேவையான சான்றிதழ்கள் வெளிவிவகார அமைச்சுக்கு அல்லது விண்ணப்பதாரரின் முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Comments powered by CComment