ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகாரத்தில் இருக்கும் லக்கலை
பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இரண்டாவது முறையாகவும் 5 வாக்குகளினால் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.
லக்கலை பிரதேச சபையின் தலைவர் புத்திக சேனாரத்ன இரண்டாவது முறையாகவும் இன்று வரவு செலவுத்திட்டத்தை சமர்பித்தார்.
வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக 11 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் ஆதரவாக 6 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியின் ஐந்து உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினர் என 11 பேர் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக பிரதேச சபையின் தலைவர் உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 6 உறுப்பினர்கள் வாக்களித்தனர். கடந்த 25 ஆம் திகதி முதல் தடவையாக வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டதுடன் இன்று இரண்டாவது முறையாகவும் திட்டம் தோற்கடிக்கபட்டுள்ளது.
Comments powered by CComment