திருகோணமலை - கிண்ணியா, குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால்,
தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த படகில் பயணித்த மேலும் 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணித்த படகு ஒன்றே இவ்வாறு இன்று காலை விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
குறிஞ்சாங்கேனி பிரதேசத்தில் பால நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதால் அவ்விடத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த மோட்டார் இழுவைப் படகு ஒன்றே இவ்வாறு கவிழ்ந்துள்ளது.
அத்துடன் மேலும் சிலர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகும் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சிலர் காணாமல் போயுள்ளதுடன், அவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Comments powered by CComment