சீரற்ற வானிலையால் ரயில் பாதைகள் சேதமடைந்ததன்
காரணமாக, இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு- கண்டி ரயில் சேவைகள் இன்றிலிருந்து (22) வழமைக்குத் திரும்பும் என ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனையிலிருந்து பலன ரயில் நிலையம் வரை, ரயில் பாதை சேதமடைந்தமையால் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்த்தாகவும் தற்போது சேதமடைந்திருந்த ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments powered by CComment