இலங்கையில் புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை
அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது ஏற்கனவே செயலில் இருக்கும் பிரதான கட்சிகளின் பிளவுகளைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி,
இலங்கையில் ஏற்கனவே 70 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் கடந்த ஆண்டு மட்டும் மேலும் 200 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதில் ஐந்து மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன.
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் புதிய அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படும். அதில் ஒரு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அந்த விண்ணப்பத்துக்குரியவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.
எனினும் குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் கடந்த ஆண்டு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்துக்குரியவர்கள் கூட, வடக்கு ஏனைய இடங்களில் இருந்து மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
Comments powered by CComment