மாகாணங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை அமுலில் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் 25 வீதமான போக்குவரத்து சேவைகளே இக்காலப்பகுதியில் முன்னேடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் பொது போக்குவரத்தின் போது எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நாளை திங்கட்கிழமை முதல் சுகாதார வழிகாட்டல்களுக்கமைய அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று கடமைக்கு அழைப்பதற்கான அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
Comments powered by CComment