ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை இழக்கும் அபாயம் இல்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அரசாங்கத்தையும் இராணுவ வீரர்களையும் காட்டிக்கொடுக்க முயன்றவர்களே இவ்வாறு அவதூறு பரப்பி வருகின்றனர். ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.” என்றும் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
Comments powered by CComment