எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் சைக்கிள் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலக முன்றலில் இருந்து மானிப்பாய் பிரதேச சபை வரையில் குறித்த சைக்கிள் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வலி.தென்மேற்கு பிரதேச சபை தலைவர் அ.ஜெபநேசன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments powered by CComment