கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, கௌதாரி முனைப்பகுதியில் சீனர்கள் அட்டை பிடித்து வருவதாக அந்தப் பகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கௌதாரி முனைப்பகுதியில் புதிதாக அட்டை பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணத்து மீனவர்களின் பெயரில் அனுமதி வழங்கப்பட்டு அந்தப் பெயர்களின் கீழ் ஆள்மாறாட்டம் செய்து சீனர்கள் அட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சீனர்கள் அட்டை பிடித்தலில் ஈடுபடும் படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தென் இலங்கை மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மீனவர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் முகமாக சீனர்களும் அட்டை பிடித்தலில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
Comments powered by CComment