பொது மக்களின் வீட்டுத் தொலைபேசி எண்களுக்கு பொலிஸ் அழைப்புக்கள் என வரும் போலி அழைப்புக்கள் குறித்து அவதானமாக மக்கள் இருக்குமாறு, இலங்கைக் காவற்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பொது மக்களுக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான அழைப்புக்களில் அதிகமானவை வீட்டுத் தொலைப்பேசி எண்களுக்கு மேற்கொள்ளப்படுதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இவ்வாறான மிரட்டல் அழைப்புக்களின் போது, ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவங்களை காரணம் காட்டி, வங்கி கணக்குகளில் ஒரு தொகை பணத்தை வைப்பிலிடுமாறு மக்கள் அச்சுறுத்தப்படுவதாகவும், இதுபோன்ற அழைப்புக்கள் வந்தால், அது தொடர்பில் பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவிப்பதுடன், மோசடியாளர்கள் கூறும் வங்கி கணக்குகளில் பணத்தை வைப்பிலிட வேண்டாம் எனவும், பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Comments powered by CComment