கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, இந்தியாவை விட மோசமான நிலையை நோக்கி இலங்கைப் பயணித்துக் கொண்டிருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் சனத்தொகையின்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவோர், தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, கொரோனா வைரஸ் நிலைமைகளால் இந்தியா முகங்கொடுத்துவரும் நிலைமைகளைத் விட, மோசமான நிலைமையை நோக்கி இலங்கை பயணிப்பதாகவும் அந்தச் சங்கத்தின் துணை தலைவர் வைத்தியர் நவீன் சொய்சா தெரிவித்துள்ளார்.
வீதிகளில் செல்லும் வாகனங்களைப் பார்க்கும்போது, நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளதைப்போல தெரியவில்லை எனத் தெரிவிக்கும் அவர், ‘பயணக் கட்டுப்பாடுகளை மீறும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நமக்கு ஆதரவான ஒருவர் உயிரிழப்பார்கள் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.’ என்றுள்ளார்.
Comments powered by CComment