இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1600ஐ தாண்டியது.
நேற்று வியாழக்கிழமை 42 பேர் கொரோனா தொற்றுக்களினால் உயிரிழந்துள்ளனர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,608 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நேற்று மாத்திரம் 3,264 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 195,811 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Comments powered by CComment