கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனாவுக்கான தடுப்பூசியை வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் தடுப்பூசிகள் தொடர்பான வழிநடத்தல் குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.
தடுப்பூசி வழங்கும் போது அனர்த்தம கூடிய பிரதேசங்களிலுள்ள தாய்மார்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று விசேட வைத்தியர் சித்ரமாலா த சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை, மேலும் 12 மாவட்டங்களில் அவதானம் கூடிய பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு இம்மாதம் 08ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்கவுள்ளதாகவும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Comments powered by CComment