எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், அவரது பாரியாரும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் வியாழக்கிழமை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டார் என பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அன்று காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலும் எதிர்க்கட்சி தலைவர் கலந்துகொண்டிருந்தார்.
எதிர்க்கட்சி தலைவருடன் பாராளுமன்றத்தில் நெருக்கமாக இணைந்து பணியாற்றியவர்களை அடையாளம் காண்பதற்கு சிசிடிவி கமரா பதிவுகளை பயன்படுத்தப்போவதாக பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் காணப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களை சுயதனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற அதிகாரிகள் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தனிமைப்படுத்தலை முன்னெடுத்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments powered by CComment