நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்திருப்பதற்கு ஆளும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளே காரணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் நாட்டையும் நாட்டு மக்களையும் பேரவலத்திற்குள் தள்ளி சாதனை படைத்திருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, "கொரோனா தொற்று கடந்த புத்தாண்டு முதல் மீண்டும் அதிகரித்திருக்கின்றது. புத்தாண்டுக் கொத்தணி உருவாகுவதற்கு அரசாங்கமே காரணம். புத்தாண்டு காலத்தில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்காது விட்டு, கொரோனா தொற்றுக்கான வாய்ப்புக்களை அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது." என்றுள்ளார்.
Comments powered by CComment