கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் 89 மேலதிக வாக்குகளால் நேற்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 148 பேரும் எதிராக 59 பேரும் வாக்களித்திருந்தனர்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்படடது.
குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்றும் இன்றும் நடைபெற்றிருந்த நிலையில், 89 மேலதிக வாக்குகளால் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
Comments powered by CComment