கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை இலங்கையில் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.
இது தொடர்பில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சமர்ப்பித்துள்ள அமைச்சரவை யோசனைக்கே, அங்கிகாரம் கிடைத்துள்ளது.
இலங்கையின் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாகனமும் சினொவெக் பயோடெக் மற்றும் கெலுன் லைஃப்சயன்ஸ்சஸ் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்தே, இந்தத் தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க யோசனை முன்வைக்கபட்டுள்ளது.
கண்டி - பல்லேகெலே பகுதியில் அமைந்துள்ள தனியார் மருந்து உற்பத்தி நிறுவனமொன்றுக்கு, இந்தத் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Comments powered by CComment