முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ் மக்கள் அனைவரும் இணைய வழியாக (அதாவது Zoom வழியாக) அனுஷ்டிப்போம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று திங்கட்கிழமை தனது பேஸ்புக் பக்கத்தில் காணொளியொன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில், “நாட்டில் தொடர்ந்து பரவிவரும் கொரோனா பரவலுக்கு மத்தியில் மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒன்றுகூடி நினைவுகூர முடியாமலிருப்பது கவலைக்குரியது. எனினும் தொழில்நுட்பத்தின் உதவியோடு (Zoom) இணையத்தளத்தின் வழியாக தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம்.
அதன்படி, முள்ளிவாய்க்கால் தினமான நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 06.00 மணிக்கு ஏற்கனவே சமயத் தலைவர்கள் அறிவித்ததைப் போன்று அனைத்து ஆலயங்களிலும் மணியை ஒலிக்கவிட்ட பின்னர், 06.15 இலிருந்து ஒரு மணித்தியாலயத்திற்கு தொழில்நுட்பம் வாயிலாக ஒன்றிணைவோம்.” என்றுள்ளார்.
Comments powered by CComment