எவ்வளவு வருடங்கள் கடந்தாலும் ஹாலிவூடின் வரலாற்று காதல் காவியமான டைட்டானிக்கை விட்டுவைக்கபோவதில்லை போலும்.
செல்லப்பிராணிகளில் மனிதருக்கு சரிநிகர் ஆகிப்போன பூனையை வைத்து டைட்டானிக் திரைப்படத்தின் முக்கியகாட்சிகளை மீள் உருவாக்கிசிறப்பாக்கியுள்ளார் ஒரு யூடியூப்பர். 'ஆவ்ல்கிட்டி' எனும் யூடியூப் தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட லிஸி எனும் இந்தப்பூனைக்கு மோனிகர் எனும் மேடைப் பெயர் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, லிஸியை பல சின்னத்திரை திரைப்படங்களின் "நட்சத்திரம்" ஆக்குவதன் மூலம் அவரது உரிமையாளர் இணையப் புகழைப் பெற்றுள்ளார். டைட்டானிக் மட்டுமல்ல பல விருது பெற்ற படங்கள் மற்றும் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் லிஸி நடித்துள்ளது குறிப்பிடதக்கது. ஆனால் டைட்டானிக்கின் ரோஸ் பாத்திரத்தில் OwlKitty எப்படியோ மிகவும் பொருத்தமாக தெரிகிறது.
கடந்த பிப்ரவரி 14ஆம் திகதி அன்பர்கள் தினத்தில் வெளியான இந்த காணொளி பூனைப்பிரியர்களிடையே இன்றுவரை வைரலாகி வருகிறது.
Comments powered by CComment