வரலாற்று ஓவியங்கள், இசை கலைப்படைப்புகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக நீங்கள், கூகுளின் கலை & கலாச்சாரம் இணையத்தளம் குறித்து அறீவீர்களாக? நவீன தொழில்நுட்ப வசதி பெருக்கத்தில் அற்புத ஓவியங்கள் நிறைந்த அருங்காட்சியகத்தை உங்கள் வீட்டிலிருந்தபடியே இணையத்திரையில் காணலாம்.
அதுமட்டுமல்ல போர் அடிக்காமல் இருக்க புதுமையான பல விளையாட்டுகளும் அங்கே காணப்படுகின்றன. இசை உருவாக்குவது, குழம்பிய துண்டுகளை சரியாக இணைத்து படம் உருவாக்குவது, பழங்கால சொற்களை கண்டுபிடிப்பது, ஓவியங்களின் நிறங்களை பற்றி தெரிந்துகொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. மேலும் உங்களது புகைப்படங்களை மாற்றி பழைய புகழ்பெற்ற ஓவியங்களுடன் பொருத்தி மாஸ்கிங் செய்யும் தொழில்நுட்பத்தையும் வழங்குகிறது. முக்கியமாக உங்களது கைப்பேசிகளிகளில் App வடிவிலும் பதிவிறக்கிவைத்துக்கொள்ளலாம். ஆக கைப்பேசிகளில் கூட விளையாட்டுடன் வரலாற்றின் மிகச்சிறந்த பக்கங்களை ஆராய்ந்து படித்து தெரிந்துகொள்ளும் வாய்ப்பை கூகுள் ஏற்படுத்திருப்பது குறிப்பிடதக்கது.
இணைப்பு : artsandculture.google
Comments powered by CComment