counter create hit  லொகார்னோ திரைப்படவிழாவில் ஆளுமையான ஒரு இத்தாலிய திரைப்படம் :  Rossosperanza 

 லொகார்னோ திரைப்படவிழாவில் ஆளுமையான ஒரு இத்தாலிய திரைப்படம் :  Rossosperanza 

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலகின் முதன்மையான 10 திரைப்படவிழாக்களில், ஒன்றான, லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா, 76 வது வருட நிறைவை கொண்டடுகிறது. இதில் காண்பிக்கப்படும், போட்டித் திரைப்படங்கள் எப்போதும், சினிமாவின் புதிய பரிமாணங்களை, புதிய கோணங்களில் தேடிக் கொண்டே இருப்பவை. இதுவரை இருக்கும் சினிமாவின் கோட்பாடுகளை உடைத்து கொண்டே இருப்பவை. இதில் ஆபத்தும் இருக்கிறது. சிலவேளை உங்களுக்கு திரைப்படம், பிடிக்காமல், புரியாமல் போகலாம். ஆனால் அதே நேரம் உங்களால் அந்த திரை அனுபவத்தை மறக்கவும் முடியாமல் போகலாம். இந்த திரைப்படங்களை தெரிவு செய்யும் லொகார்னோ திரைப்படவிழாவின் அழகே அது தான். 

அப்படி இம்முறை சர்வதேச போட்டிப் பிரிவில் பார்த்த ஒரு திரைப்படம், இத்தாலிய சினிமாவானா  « Rossosperanza » RedHope. நேரடி தமிழ் ஆக்கம் செந் நம்பிக்கை. இயக்குனர் Annarita Zambrano. இத்தாலியின் 90 களை பிரதிபலிக்கும் பாணியில் உருவாக்கப்பட்ட கதை.  Ultra Rich அல்லது  பெரும் பணக்காரர்கள் என நாம் சொல்லும், முதலாலித்துவ கொள்கைகளில் குளித்து, தொழிலாளர் வர்க்கத்தை பிளிந்து, பெரும் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டு திரியும் குடும்பங்களிடம் எப்போதும் அவர்களை எங்காவது தற்செயலாக பார்த்தாலே, எமக்குள் ஒரு கேள்வி கேட்போமே. இந்த பணத்தையெல்லாம் வைத்து என்ன செய்யப் போகிறார்கள் என்று. அந்த குடும்பங்களை பற்றிய திரைப்படம் இது. நான்கு பதின்ம வயதுப் பிள்ளைகள் அசாதாரண மனநிலையில் வளர்கின்றனர். ஒரு மன நலப் பள்ளியில் கொண்டுவந்து பெற்றோர் விடுகின்றனர். அங்கு அவரக்ளை போன்றே பல பிள்ளைகள் இருக்கின்றனர். எப்படியாவது இவர்களை « Normal » ஆக மாற்றி எங்களிடம் சேர்த்துவிடுங்கள் என பெற்றோர் கெஞ்சுகின்றனர். அந்த பள்ளியில் மிருகங்களில் இருந்து மனிதன் எப்படி வேறுபடுகின்றான். நீங்கள் மனிதர்களாவதற்கு எப்படி இருக்கவேண்டும் என கற்றுக் கொடுக்கப்படுகிறது. அப்பள்ளிச் சேர்க்கைக்கே மிகுந்த பணம் தேவை. அப்பள்ளியின் அதிபரின் மகனும் அதே பள்ளியில் தான் அசாதாரண மனநிலைக்காக கண்காணிப்பில் இருக்கிறான். 

அந்த பள்ளியிலிருந்து தப்பியோடி, சுதந்திரத்தை தேடும் நான்கு பிள்ளைகளை நோக்கி கதை நகர்கிறது.  பதின்மவயதின் அனைத்து இச்சைகளையும் தேடிப் போகின்றனர். உடலறுவு, போதைப் பொருட்கள் என எதனையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் இவர்கள் ஏன் இப்படி ஆனார்கள், அவர்கள் பெற்றோரின் வளர்ப்பு எப்படி இருந்தது. அல்லது பிள்ளைகளின் உறவினர்கள் யார், நண்பர்கள் யார், அவர்களை பற்றி எந்த அனுமானமும் உங்களுக்கு இல்லையெனில் அப்பிள்ளைகள் எப்படி நாசமாககூடும், அளவுக்கு மிஞ்சிய பணம் என்னவெல்லாம் செய்யும். எப்படி ஒரு இளம் சமூகத்தினை கெடுத்துக் குட்டிச் சுவராக்கும் என அதன் சூட்சுமங்க்ளை நோக்கி எம்முள் பல கேள்விகளை எழுப்பி முடிவடைகிறது படம். 

திரைக்கதை வடிவமைப்பு illnear என சொல்லப்படும் முன்னுக்கு பின் சென்று கதை சொல்லும் பாணி. நடிகர் தேர்வு மிக கச்சிதம். காட்சி வடிவமைப்புக்கள் மிகுந்த வண்ணமயானது.  இம்முறை லொகார்னோ போட்டித் திரைப்படங்களில் மிக ஆளுமையான ஒரு திரைப்படம் இது. ஒரு நல்ல திரைப்படம், அதன் காட்சி வடிவமைப்பை எப்படி செய்திருப்பார்கள் என முதன்முறை நீங்கள் பார்க்கும் போது, உங்களை சிந்திக்கவிடாது. அந்தளவு கதை ஈர்த்துக் கொண்டே இருக்கும். இந்த திரைப்படம் தொடக்கத்திலிருந்து முடியும் வரை அப்படித்தான் இருந்தது. பல கோடி ரூபாய் பொருட் செலவில் தன் தந்தை வளர்த்த செல்லப்புலியின் கூட்டைத் திறந்துவிட்டு, அந்த புலியே தன் குடும்பம் உட்பட ஊரையே நாசப்படுத்தி கொன்று குவிப்பதை வேடிக்கை பார்த்துவிட்டு, தன் நண்பர்களுடன் தப்பியோடும் பெண்ணாக, இந்த படத்தின் கதாநாயகி. அக்கதாபாத்திரங்களிலேயே வாழ்ந்திருப்பார்கள். 

இந்த திரைப்படத்தில் இத்தாலிய Genre சினிமாக்களின் Polar, Horreur, Serie B என அனைத்தினது தாக்கமும் இருக்கிறது.  இத்தாலிய தலை சிறந்த இயக்குனர்களான Mario Bava மற்றும் Dario Argento இருவரையும் ஒன்றிணைத்தால் போல் மிளிர்கிறார் Annarita Zambrano. அவர் ஏற்கனவே தனது குறுந்திரைப்படங்களுக்காக கேன்ஸ், பேர்லின் விழாக்களில் விருதுகள் வென்றவர். இவர் உருவாக்கிய முதல் முழுநீளத் திரைப்படமான Après la guerre,  கேன்ஸ் திரைப்பட விழாவின் Un Certain Regard பிரிவில் தேவனது. « என்னை பொருத்தவரை சினிமா என்பது எமக்குள் இருக்கும் உளச்சான்றை (Conscience) ஐ உளுக்கிக் கொண்டிருக்கும் ஒன்று! » என்கிறார் Annarita. அவர் கதைசொல்லும் விதம், இந்த படத்திற்கும் நிச்சயம் பல விருதுகளை தேடித் தரும், அதன் தொடக்கம் லொகார்னோவாக அமையலாம். 

முன்னோட்டம் : 

 புகைப்படங்கள் : ©Mad Entertainment | ©Locarno Film Festival / Ti-Press

 

 - 4தமிழ்மீடியாவுக்காக லொகார்னோவிலிருந்து ஸாரா

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.